ஓவ்வொருவருக்கும் பிறவி அமைப்பு என்று ஓன்று உண்டு. அதனை அவரவர் ஜெனன ஜாதகத்தின் மூலம் அறியலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத நபர்களே இல்லை. ஆனால் ஓவ்வொருவருக்கும் தீர்க்க முடிந்த பிரச்சனை, தீர்க்க முடியாத பிரச்சனை என்று உண்டு. எந்த ஓரு பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று இல்லை.
கணவன் மனைவியிடையே உள்ள பிரச்சனை, விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாத நபர்கள் கோர்ட், வழக்கு விவாகரத்து என்று போகிறார்கள். அனைத்திற்கும் கிரக நிலைகள் தான் தீர்மானிக்கும். அவரவர் ஜெனன ஜாதகத்தில் ஆய்வு செய்து பிரச்சனை தீர்ந்து சுமூகமாக இருப்பார்களா, விவாகரத்து ஆகுமா அல்லது இதற்கு எளிய பரிகாரம் உண்டா என்று ஆய்வு செய்து தங்களுக்கு வழிகள் கூறப்படும்.


கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- கணவன் , மனைவி இருவர் ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் தெளிவாக அனுப்பவும்.
- திருமணம் ஆன தேதி, நேரம், ஊர் இவைகளை அனுப்பவும்.
- ஜாதகம் இல்லையென்றால் போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டுக்கொள்ளவும்.
[email protected]




முதல் திருமணம் விரைவில் பருவ வயதில் நடந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், கோட்ச்சார கிரக சஞ்சாரங்களாலும், ஜெனன ஜாதக அமைப்பின் படியும் முதல் களத்திரத்தை இழந்திருப்பார்கள், அவர்கள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடிக்காத குறையாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.



ஒவ்வொரு ஆணும், பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று, தாம்பதியம் என்னும் சம்சார சாகரத்தில் மூழ்கி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.
இது போன்ற திருமணம் தடை தாமதத்திற்கு என்ன காரணம் என்று அவர்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் ஆய்வு செய்து என்ன தோஷங்கள் உள்ளன என்றும் அதற்கு என்ன எளிய முறை பரிகாரம் என்றும் கூறப்படும்.





வாழ்க்கைத் துணையால் பெறும் இன்பம் எத்தகையது, அவர் நல்லவரா, பண்புள்ளவரா, படித்தவரா, பாசாங்கு செய்பவரா, குணக்கேடு உடையவரா, ஜாதகருக்கு நடைபெறும் திருமணம் மகிழ்வானதாக நடக்குமா, பல்வேறு குழப்பங்களுடன் நிறைவேறுமா, துணையைத் தானே தேர்ந்தெடுப்பாரா, குடும்பத்தினர் தேர்ந்தெடுத்ததை ஏற்பாரா, தாம்பத்ய சுகம் எத்தகையது என்றும் தங்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் எப்படிப்பட்ட களத்திரம் அமையும் என்பதனை ஆய்வு செய்து பலன் தருகின்றோம்.















