குரு :
சித்திரை மீ 9 உ (22-04-2019) திங்கட்கிழமை இரவு 1.10 மணிக்கு சூர்ய உதயாதி 48.04 நாழிகை அளவில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான் வக்ர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் திரும்புகிறார்.
ஐப்பசி மீ 18 உ (4-11-2019) திங்கட்கிழமை மறுநாள் விடியற்காலை 5.17 மணிக்கு சூர்ய உதயாதி 57.56 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார்.
பங்குனி மீ 16 உ (29-03-2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 3.54 மணிக்கு சூர்ய உதயாதி 54.19 நாழிகை அளவில் குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.
சனி :
தை மீ 10 உ (24-01-2020) வெள்ளிக்கிழமை காலை 9.57 மணிக்கு சூர்ய உதயாதி 8.13 நாழிகை அளவில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.
வாக்கியப்படி குரு :
வைகாசி மீ 4 உ (18-05-2019) சனிக்கிழமை 31.01 நாழிகை அளவில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான் வக்ர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் திரும்புகிறார்.
ஐப்பசி மீ 11 உ (28-10-2019) திங்கட்கிழமை 5.14 நாழிகை அளவில் குரு பகவான் நேர் கதியில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார்.
பங்குனி மீ 14 உ (27-03-2020) வெள்ளிக்கிழமை 55.09 நாழிகை அளவில் குரு பகவான் அதிசாரமாகத் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார்.
(இவ்வருடம் திருக்கணிதப்படி ராகு-கேது பெயர்ச்சியும் வாக்கியப்படி சனிப் பெயர்ச்சியும் ராகு-கேது பெயர்ச்சியும் கிடையாது).



ஆண்குறி – தரித்திரம், வலது இடது அபானம் – தனமுண்டு, வலது இடது தொடைகள் – பிதா அரிஷ்டம், வலது இடது முழங்கால்கள் – சுபம், வலது இடது கணுக்கால்கள் – சுபம், வலது இடது பாதங்கள் – பிராயணம், வலது பாதம் – ரோகம், இடது பாதம் – துக்கம், பிருஷ்டம் – சுபம், வலது பாத விரல்கள் – ராஜ பயம், இடது பாத விரல்கள் – நோய், வலது இடது கால் விரல் நகங்கள் – தனநாசம் , தேகத்தில் ஓடல் – தீர்க்காயுசு.
அனுபவங்கள்